மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் சிக்கிய ராட்சத யானை திருக்கை மீன்.!
மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவரது வலையில் ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியது.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதன் காரணமாக பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100க்கும் அதிகமான நாட்டு படகில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று மீன்பிடித்து திரும்பிய மீனவரின் வலையில் 8 அடி அகலத்தில் 600 கிலோ எடை கொண்ட ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியது. ஒரே நேரத்தில் சுமார் 600 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன் சிக்கியிருப்பது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இந்த வகையான திருக்கை மீன் கருவாடு செய்வதற்காக வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம் என கூறப்படும் நிலையில், இதனை கேரள மீன் வியாபாரி ஒருவர் 54 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார்.
Comments