விற்காமல் வீணாவதைத் தவிர்க்க கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு
விற்காமல் வீணாவதைத் தவிர்க்க கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை டிசம்பர் இறுதியுடன் சீரம் நிறுவனம் நிறுத்திவிட்டதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
2 தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை 9 மாதத்தில் இருந்து 6 மாதமாகக் குறைக்க வேண்டும் எனப் பூனாவாலா ஏற்கெனவே அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பு மருந்து விலையை ஒரு டோஸ் 600 ரூபாயில் இருந்து 225 ரூபாயாகக் குறைத்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இப்போது 20 கோடி மருந்துக் குப்பிகள் விற்காமல் இருப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments