பள்ளி வாகனத்தில் தலையை வெளியே விட்டு மின் கம்பத்தில் மோதி சிறுவன் பலி.. ஆறுதல் கூறாமல் வாயை மூடி அமைதி காக்கச் சொன்ன அரசு அதிகாரி

0 5155
பள்ளி வாகனத்தில் தலையை வெளியே விட்டு மின் கம்பத்தில் மோதி சிறுவன் பலி.. ஆறுதல் கூறாமல் வாயை மூடி அமைதி காக்கச் சொன்ன அரசு அதிகாரி

டெல்லியில் மகனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த தாயை அரசு அதிகாரி ஒருவர் விரலை நீட்டி திட்டும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

டெல்லி மோடிநகர் பகுதியில் கடந்த 20-ஆம் தேதி பள்ளி பேருந்தில் சென்ற சிறுவனுக்கு குமட்டல் ஏற்பட்டதால் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபோது மின் கம்பத்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் ஷுபாங்கி ஷுக்லா, மகன் இறந்த துக்கத்தில் அழுது புலம்பிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்து வாயை மூடி அமைதியாக இருக்கும்படி விரலை நீட்டி திட்டியதாக வீடியோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், பள்ளி வாகன ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments