நாஞ்சில் சம்பத்தின் காரை வழிமறித்து பாஜகவினர் தாக்க முயற்சி...போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு வருகை தந்த நாஞ்சில் சம்பத்தின் காரை வழிமறித்து தாக்க முயன்ற, பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாஞ்சில் சம்பத் வருவதை அறிந்து முன்கூட்டியே அங்கு திரண்ட பாஜகவினர், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக பேசியதற்காக, நாஞ்சில் சம்பத் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.
அவ்வழியாக வந்த நாஞ்சில் சம்பத்தின் காரை வழிமறித்து அவர்கள் தாக்க முயன்ற நிலையில், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Comments