ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் இடிப்பு.. ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0 2789
ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் இடிப்பு.. ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை திருவெற்றியூரில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக, ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 27 கடைகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் மக்கள் சிரமத்திற்குள்ளாவதை கருத்தில் கொண்டு, அண்ணாமலை நகரையும் கிராமத்தெருவையும் இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க தென்னக ரயில்வே முடிவு செய்தது.

இதற்கான பணிகளை தொடங்குவதற்காக ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 130 குடியிருப்புகளை காலி செய்ய  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் முதற்கட்டமாக 27 கடைகள் இடிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments