குடிகார தாயால் பரிதவித்த 2 வயது குழந்தை...காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறை.!
புதுச்சேரியில், மதுபோதைக்கு அடிமையான தாயால் பரிதவித்த 2 வயது குழந்தையை மீட்ட காவல்துறையினர், குழந்தையின் பெரியம்மாவிடம் கடிதம் பெற்று காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்த 40 வயது பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், அப்பெண் மதுவுக்கு அடிமையாகி, தனது 2 வயது ஆண் குழந்தையை சரிவர பராமரிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அந்த பெண் மதுபோதையில் சாலையில் படுத்து கிடந்தபோது குழந்தை அழுதுக்கொண்டிருந்ததால் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு குழுவுடன் சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டனர்.
மேலும் குடிபோதையில் இருந்த பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Comments