புவிநாளையொட்டி டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி.. இந்தியாவின் பசுமைப் பரப்பு 2261 ச.கி.மீ. அதிகரித்துள்ளதாகத் தகவல்
புவிநாளையொட்டி டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள பிரதமர், புவியின் கருணைக்கு நன்றி தெரிவிப்பதையும், புவியைக் காக்க நமக்குக் கடமையுள்ளதையும் வலியுறுத்தியுள்ளார்.
மலை, கடல், ஆறுகளில் கழிவுகள் போடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் பசுமைப் பரப்பு 2019ஆம் ஆண்டில் 2261 சதுரக்கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாகவும், பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட உழவர்கள் இயற்கை வேளாண்மையைப் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தப் பெருந்திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புலி, சிங்கம், காண்டாமிருகம், சிறுத்தை ஆகிய காட்டுவிலங்குகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
Comments