இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சென்டர் மீடியன் அருகே கல் மீது மோதி நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு.. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி

0 5859
இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சென்டர் மீடியன் அருகே கல் மீது மோதி நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் சென்டர் மீடியன் அருகே கிடந்த கல் மீது மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வி.புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்ற பழ வியாபாரி, திண்டுக்கலில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது  காக்காதோப்பு பிரிவு அருகே சென்றபோது சென்டர் மீடியன் அருகே கிடந்த கல் மீது அவரது வாகனம் மோதியதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தின் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ள நிலையில்,  சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments