18 முதல் 59 வயதுடையவர்கள் முன்னெச்சரிக்கை டோசை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் - டெல்லி அரசு
டெல்லியில் 18 முதல் 59 வயதுடையவர்கள் முன்னெச்சரிக்கை டோசை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்து உள்ளது.
தலைநகரில் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 முதல் 59 வயதுடையவர்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கோவின் இணையதளத்தின் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையதளம் மூலமோ, நேரடியாகவோ பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments