மீனவர்களின் தடைக்கால நிவாரண தொகை ரூ.8ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை.!

0 2920

முதலமைச்சர் அறிவுரையின்படி மீனவர்களின் தடைக்கால நிவாரண தொகை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பருவ மழையினால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த 81 விசைப்படகுகளுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதியை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்,  விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்க வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது போன்று மீனவர்களுக்கு வங்கிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments