அதிக ஆற்றல் கொண்ட லேசர் கதிர் ஆயுதம் சோதனை-இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக அமெரிக்க கடற்படை தகவல்

0 2606

அதிக ஆற்றல் கொண்ட லேசர் கதிரைக் கொண்டு குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ராணுவ சோதனையை அமெரிக்க கடற்படை வெற்றிகரமாக செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூ மெக்சிகோவில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சோதனை மையத்தில் நடந்த இந்த சோதனையில், சப்சானிக் எனப்படும் மணிக்கு 980 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்லும் ஏவுகணையை பிரதிபலிக்கும் வகையில் பறக்கவிடப்பட்ட டிரோன் ஒன்றின் இன்ஜினை மின்சாரம் மூலம் உருவாக்கப்பட்ட லேசர் கதிர் துல்லியமாக தாக்கி செயல் இழக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய லேசர் கதிர்கள் ரசாயணங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது காயில், கண்ணாடி ஆப்டிக் பைபர் உள்ளிடவற்றை பயன்படுத்தி, எதிர் வரும் இலக்கை பொருத்து  லேசர் கதிரின் ஆற்றலை மாற்றி அமைத்து தாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதாரண ராணுவ தளவாடங்களில்  உள்ளதை போல வெடிபொருட்கள் இதில் தேவை இல்லை என்பதால் லேசர் கதிர் ஆயுதங்களை பயன்படுத்துவது சுலபம் எனவும், அவை இயங்க மின்சாரம் மட்டும் போதும் என்பதால் செலவும் குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments