கார்களில் 6 ஏர்பேக்குகள் இருப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு தீவிரம்
சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், பயணிகளின் பாதுகாப்புக்காக அனைத்து ரக கார்களிலும் 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது அனைத்து ரக கார்களிலும் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் இருக்கும் பயணி ஆகியோருக்கு மட்டும் இரண்டு ஏர் பேக்குகள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து ரக கார்களிலும் 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்று வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த முடிவால், கார்களின் விலை அதிகரித்து விற்பனை பாதிக்கப்படும் என்று சில தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எனினும் கூடுதலாக 4 ஏர் பேக்குகளை இணைப்பதற்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகாது என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளதால், இதனை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments