"எனது மாளிகையை குண்டு போட்டு தகர்த்து விடுங்க"...உக்ரைன் ராணுவத்திற்கு கோரிக்கை வைத்த கோடீஸ்வரர் - காரணம் என்ன.?

0 3932

தனது மாளிகையை ரஷ்ய வீரர்கள் ராணுவத் தளவாடமாகப் பயன்படுத்துவதை கண்ட உக்ரைன் நாட்டு கோடீஸ்வரர் ஒருவர், மாளிகையை குண்டு வீசி தகர்த்து விடுமாறு உக்ரைன் ராணுவத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

துறைமுகத்தை நிர்வாகிக்கும் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ-வான ஆண்டிரே ஸ்டாவ்னிட்சர் அன்மையில் சொகுசு பங்களா ஒன்றை கட்டினார். பின், ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து அவர் போலந்தில் தஞ்சமடைந்தார்.

கீவ் மாகணத்துக்குள் புகுந்த ரஷ்ய படைகள், அவரது மாளிகையில் தளவாடம் அமைத்து கீவ் நகர் மீது ராக்கெட் ஏவுகணைகளை வீசி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை அவரது மாளிகையில் பதுக்கி வைத்துள்ளனர்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா மூலம் இவற்றை பார்த்த ஸ்டாவ்னிட்சர், தனது மாளிகையின் இருப்பிடம் குறித்து உக்ரைன் ராணுவத்தினருக்கு தெரிவித்ததுடன், குண்டு வீசி அதனை தகர்த்து விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments