விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க தடை!
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. இங்கிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ரஷிய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிப்பதாக டென்னிஸ் கிளப் அமைப்பு அறிவித்துள்ளது.
ரஷிய படையெடுப்புக்கு உறுதுணையாக இருந்ததால் பெலாரஸ் நாட்டு வீரர்களும் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்படுகிறது.
இதன்மூலம் உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், 8-வது இடத்தில் இருக்கும் ஆண்ட்ரி ரூப்ளேவ் ஆகியோர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே உலகக் கால்பந்து போட்டியில் ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments