கேரளாவில் மே 1-ந் தேதி முதல் பேருந்து, டாக்ஸி, ஆட்டோ கட்டணங்கள் உயர்வு
கேரளாவில் மே 1-ந் தேதி முதல் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோக்களின் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அரசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும், ஆட்டோக்களின் குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக அதிகரித்துக் கொள்ள ஒப்புதல் தரப்பட்டுள்ளதோடு, குறைந்தபட்ச டாக்ஸி கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 2018ஆம் ஆண்டு கடைசியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தில் மொத்தமாக 12,500 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அரசு நடத்தும் மாநில போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 6,500 பேருந்துகள் மட்டுமே உள்ளன. இதனால், அரசை விட தனியார் பேருந்துகளே, மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்பவையாக உள்ளன.
Comments