சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கு கடும் தண்டனை....விரைவில் புதிய சட்ட மசோதா!

0 2748

தென் அமெரிக்க நாடான பெருவில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் கயவர்களை, ஆண்மையற்றவர்களாக மாற்றும் புதிய சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக, 48 வயதுடைய நபர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அந்நாடு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, சிறை தண்டனை வழங்கப்படுவதோடு, தண்டனை முடிவில் ரசாயன முறையில் அவர்களை ஆண்மையற்றவர்களாக ஆக்கவும் முடிவு செய்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா சட்டமாக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments