எரிபொருள் வாங்க இந்தியா மேலும் 500 மில்லியன் டாலர் நிதியுதவி - இலங்கை அமைச்சர்

0 2847
எரிபொருள் வாங்க இந்தியா மேலும் 500 மில்லியன் டாலர் நிதியுதவி - இலங்கை அமைச்சர்

இலங்கை அரசுக்கு எரிபொருளை வாங்க இந்தியா 500 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல்.பெய்ரிஸ் தெரிவித்துள்ளார்.

உணவு, மருந்து ,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க 2 பில்லியன் டாலர் வரை கடன் வரம்பையும் இந்தியா உயர்த்தியுள்ளது. கடந்த முறை இந்தியா 1 லட்சத்து 20 ஆயிரம் டன்கள் டீசலையும் 40 ஆயிரம் டன் பெட்ரோலையும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. மொத்தம் 4 லட்சம் டன் எரிபொருளை இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , வங்காள தேசமும் 450 மில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஒத்திவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஐ.எம்.எப் நிதியுதவி பெற ஆறுமாத காலம் ஆகலாம்.

அதுவரை இடைக்கால தேவைகளுக்காக நிதியுதவிகள் தேவைப்படுவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஐஎம்எப் இலங்கைக்கு அவசர உதவி வழங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments