தாயை பழித்தவனுக்காக கத்தியை எடுத்தவரின் தலையை அறுத்த கூட்டாளிகள்.. பிஞ்சில் பழுத்த கஞ்சா குடிக்கிகள்

0 5618

தாயை பழித்து பேசிய கூட்டாளிகளிடம் கத்தியை காட்டிய எச்சரித்தவரை, தனியாக அழைத்துச்சென்று தலையை துண்டாக அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் விருதுநகர் மாவட்டம் பாப்பாங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விருதுநகர் மாவட்டம், வீரசோழன் அருகேயுள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். 30 வயதான இவர் கடந்த 16 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மாயமானார்.

ஆனந்தராஜ் காணாமல் போனது குறித்து வீரசோழன் காவல் நிலையத்தில் 18 ஆம் தேதி புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் 19ந்தேதி பாப்பாங்குளம் பகுதியில் உள்ள மயானத்தில் தலை தனியாக துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் ஆனந்தராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

ஆனந்தராஜ் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் உயர் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர், ஆனந்தராஜ் மாயமான அன்று அவருடன் ஒன்றாக சுற்றிய A.தரைக்குடியை சேர்ந்த 20 வயது வசந்தபாண்டி , 19 வயது இருளாண்டி, ஒட்டங்குளத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்த போது கஞ்சா கூட்டாளிகளின் குரூர குணம் அம்பலமானது.

எந்த ஒரு போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத ஆனந்தராஜ் , கஞ்சா போதைக்கு அடிமையான வசந்த பாண்டி, இருளாண்டி,சிலம்பரசன்மற்றும் இருள் ஆகியோருடன் கூட்டாளியாக சுற்றி உள்ளான்.

சில தினங்களுக்கு முன்பு கூட்டாளிகளுடன் ஒருவருக்கொருவர் கேலியாக பேசும் போது புற்றுனோயால் உயிரிழந்த ஆனந்தராஜின் தாயை பற்றி இருவர் இழிவாக பேசியதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கூட்டாளிகளை குத்துவதற்கு பாய்ந்துள்ளார். அவதூறாக பேசியவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

மற்றவர்கள் ஆனந்தராஜை சமாதனப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தங்கள் முன் கத்தியை எடுத்து சுழற்றிய ஆனந்தராஜை பழிவாங்கும் திட்டத்துடன் சுற்றிய அவனது கூட்டாளிகள் திட்டமிட்டபடி ஆனந்தராஜை கடந்த 16 ந்தேதி பாப்பாங்குளம் சுடுகாட்டு பகுதிக்கு இரவு வேளையில் அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு வைத்து கூட்டாளிகள் 4 பேரும் மது அருந்தி கஞ்சா புகைத்தபடி ஆனந்தராஜை கடுமையாக தாக்கி உள்ளனர். ஒரு கட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை, கழுத்தை அறுத்து துண்டாக வெட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக குரூர கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கமுதி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இருள் என்கிற இருளாண்டியை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். கூடா நட்பு கேடாக முடியும் என்பதற்கு இந்த கொடூர கொலை சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments