9000 குதிரைத் திறனுள்ள ரயில் எஞ்சின்களைத் தயாரிக்கும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று - பிரதமர் மோடி
ஒன்பதாயிரம் குதிரைத் திறன்கொண்ட ரயில் எஞ்சின்களைத் தயாரிக்கும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் தாகோடு, பாஞ்ச்மகால் மாவட்டங்களில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது தாகோடில் உள்ள ரயில் எஞ்சின் தொழிற்சாலை 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தப்பட உள்ளதாகவும், அதில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தத் தொழிற்சாலையில் 1200 முதல் ஒன்பதாயிரம் குதிரைத் திறன் கொண்ட ரயில் எஞ்சின்கள் தயாரிக்கப்படும் என்றும், முதல் எஞ்சின் 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இவ்வகை எஞ்சின்கள் 4500 டன் எடையுள்ள சரக்கு ரயில்களை மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இழுத்துச் செல்லும் திறன்கொண்டவை என்பதால் சரக்கு ரயில் போக்குவரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments