ராட்சத மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட ஆமை.. சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கடலுக்குள் விட்ட தன்னார்வலர்கள்.!
வங்கக் கடலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராட்சத மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்து மீட்கப்பட்ட ஆமை, சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.
கூவத்தூர் அடுத்த பழையநடு குப்பத்தில் மீனவரின் ராட்சத வலையில் சிக்கிய ஆலிவ் ரிட்லி வகை ஆமை, முன்புற வலது பக்க துடுப்பு மற்றும் தொண்டை பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டது.
அதன்பின், நீலாங்கரையில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம் இந்த ஆமை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் முன்பக்க வலது துடுப்பு முழுவதுமாக நீக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆமை சிகிச்சையில் பூரண குணமடைந்ததை தொடர்ந்து, தன்னார்வலர்களால் இன்று நடுகடலில் விடப்பட்டது.ஒரே ஒரு முன்பக்க துடுப்பு இருந்தாலும், கடலில் விட்டதும் உற்சாகத்துடன் நீந்திய ஆமை தன்னாரவலர்களை விடைபெற்று சென்றது
Comments