டெஸ்லா காருக்கு சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஏற்றி சோதனை செய்ய திட்டம்.!

0 8536

ஆஸ்திரேலியாவில் சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சூரிய சக்தி மின்சாரம் மூலம் டெஸ்லா காரை சார்ஜ் ஏற்றி இயக்கி சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் பாயை போல சுருட்டி எடுத்துச்செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள  பிரத்யேக பிரிண்டட் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

சோதனை ஓட்டத்தின் போது பகல் நேரங்களில் எங்கெல்லாம் காரின் பேட்டரிக்கு சார்ஜ் தேவைப்படுகிறதோ அப்போது காரை நிறுத்தி, இந்த சோலார் பேனல்களை விரித்து சார்ஜ் எற்றி விட்டு தொடர்ந்து பயணம் செய்யலாம் என இந்த பிரிண்டட் சோலார் பேனல்களை உருவாக்கியுள்ள விஞ்ஞானி பால் டஸ்டூர் தெரிவித்துள்ளார்.

வழக்கமான சோலார் செல்கள் இயற்கையாக கிடைக்கும் சிலிக்கானில் இருந்து தயாரிக்கப்படும் நிலையில், இந்த வகை சோலார் செல்கள் இயற்கையாக கிடைக்கும் பாலிமர் வேதி பொருட்களை மைய்யாக மாற்றி,  பிளாஸ்டிக் போன்ற எளிதில் மடங்கும் பொருட்கள் மீது அச்சிடப்படுகிறது. இந்த மை மீது சூரிய ஒளி படும்போது மின்சாரம் உருவாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments