ஜம்மு காஷ்மீரில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்... தினமும் ரூ.5 கோடிக்கு விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
ஜம்மு காஷ்மீரில் தினமும் 5 கோடி ரூபாய்க்கு தர்பூசணி விற்பனையாவதால், பழங்கள் விற்பனையில் இதுவரை இல்லாத புதிய சாதனையை படைத்துள்ளது.
புனித ரமலான் மாதம் தொடங்கியது முதல் அங்கு தர்பூசணி பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தர்பூசணி பழங்களை காஷ்மீரிகள் விரும்பி உண்பதே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிராவில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் தர்பூசணி பழங்களுடன், ஸ்ரீநகரில் உள்ள பழ மண்டியில் வந்து குவிகின்றன.
தொலை தூர மாநிலங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் கொண்டு வரப்படுவதால், போக்குவரத்து செலவால் விலை அதிகரித்து இருப்பதாகவும், பஞ்சாப்பில் இருந்து பழங்கள் வரத் தொடங்கும் போது விலை குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments