வணிகவரி செலுத்தாத வணிகரின் வங்கி கணக்கில் இருந்து வரிநிலுவைத் தொகையை வசூல் செய்த வணிகவரித்துறை அதிகாரிகள்.!

0 2693

சேலத்தில், 86 லட்ச ரூபாய் வணிக வரி செலுத்தாமல், 5 ஆண்டுகளாக இழுத்தடித்த வணிகரின் வங்கி கணக்கில் இருந்து அந்த பணம் வசூலிக்கப்பட்டது.

சேலத்தை சேர்ந்த வணிகர் ஒருவருக்கு 2016-17ம் நிதியாண்டிற்கு 86 லட்ச ரூபாய் விற்பனை வரி விதிக்கப்பட்டது. இது குறித்து தொடர்ச்சியாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும், 5 ஆண்டுகளாக அவர் வரி பாக்கியை செலுத்தாமல் இருந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட வணிகரின் பதிவுச்சான்று ஆவணங்களை வணிகவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அவருக்கு மும்பையில் வங்கி கணக்கு இருப்பது தெரியவந்தது. அதனை முடக்கிய அதிகாரிகள், அந்த வங்கியிடம் இருந்து 86 லட்ச ரூபாயை வரவோலையாகப் பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments