RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
அதன் படி, தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் மொத்தமாக 1.1 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கி மே 18-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பெற்றோர்கள் பள்ளிக்கல்வியின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments