ஜகாங்கீர்புரியில் சாலை, தெருக்களில் ஆக்கிரமித்திருந்த கட்டுமானங்கள் அகற்றம்.. காவல்துறைப் பாதுகாப்புடன் புல்டோசர் உதவியுடன் இடித்து அகற்றம்
டெல்லி ஜகாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏப்ரல் 16ஆம் நாள் வன்முறை நிகழ்ந்த டெல்லி ஜகாங்கீர்புரியில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். சாலையையும் தெருக்களையும் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த கட்டுமானங்கள் பொக்லைன், புல்டோசர் இயந்திரங்களின் உதவியுடன் இடித்துத் தள்ளப்பட்டன.
அப்போது வடக்கு டெல்லி மேயர் ராஜா இக்பால் சிங், காவல்துணை ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செய்த முறையீட்டில், ஆக்கிரமிப்பு அகற்ற முன்னறிவிப்பு கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சட்டவிரோதம் எனத் தெரிவித்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு இடைக்காலத் தடைவிதித்த தலைமை நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
Comments