பார்வையாளர்கள் கண்களில் தென்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள திமிங்கலம்.. தாய், அதன் குட்டி உட்பட 3 ரைட் திமிங்கலங்கள் தென்பட்டன

0 2046
பார்வையாளர்கள் கண்களில் தென்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள திமிங்கலம்..தாய், அதன் குட்டி உட்பட 3 ரைட் திமிங்கலங்கள் தென்பட்டன

அமெரிக்காவில் அழிவின் விளிம்பில் உள்ள நார்த் அட்லாண்டிக் ரைட் திமிங்கலங்கள் கடல்வாழ் உயிரின ஆர்வர்களின் கண்களில் தென்பட்டுள்ளன.

அரிதினும் அரிதாக தென்படும் இவ்வகையை சேர்ந்த 3 திமிங்கலங்கள் மஸாஷுசெட்ஸ்-ன் கேப் காட் பே கடற்பகுதியில் காணப்பட்டன.

மீன்பிடி வலைகளில் சிக்கி இறப்பது, பெரிய கப்பல்களில் மோதி இறப்பது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 2010ஆம் ஆண்டு முதல் இந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுச் சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பருவ நிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கடல் நீரின் வெப்பம் காரணமாக இந்த திமிங்கலங்கள் உண்ணும் இதர கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் குறிப்பிட்ட வகை திமிங்கல இனம் அழிந்து வருவதற்கு மிகப் பெரிய காரணம் என கூறப்படுகிறது.

புளோரிடா முதல் கனடா வரையுள்ள கடற் பகுதியில் வெறும் 336 ரைட் திமிங்கிலங்கள் மட்டுமே உயிர் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments