கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்.. காலியாக உள்ள 48 பணியிடங்களுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு கல்வி தகுதியுள்ளவர்களுக்கு நடைபெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்க, ஏராளமான பட்டதாரிகள் உச்சி வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காலியாக உள்ள 48 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2018ம் ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த பணிக்கான நேர்காணல் நாகர்கோவிலில் இன்று தொடங்கியது.
பட்டதாரிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களுடன் உச்சி வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து நேர்காணலில் பங்கேற்றனர்.நேர்காணலில் மிதிவண்டி மிதித்தல், மாடுகளை பராமரிப்பது, சான்றிதழ் சரிபார்ப்பு, போன்றவை இடம்பெற்றிருந்தன.
Comments