தமிழக CRPF வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

0 2337
தமிழக CRPF வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் மணி சாலை விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த C.R.P.F வீரர் எம்.என்.மணி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார் என்று அறிந்து மிகவும் வேதனையடைவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டைக் காக்கும் பணியில் இருந்தபோது உயிரிழந்த அவருக்கு தமது வீரவணக்கத்தைச் செலுத்துவதாகவும், அவரை இழந்து தவிக்கும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments