போரில் வழக்கமான ஆயுதங்களை கொண்டே தாக்குதல் - ரஷ்ய வெளியுறவுத்துறை
உக்ரைனில் அணு ஆயுதங்களை தவிர்த்து, வழக்கமான ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போர் 56வது நாளை எட்டிய நிலையில், போரின் மற்றொரு தொடக்கத்தை துவக்கி உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. டான்பாஸ் பகுதிகளில் உயர் துல்லிய அளவிலான ஏவுகணைகளை வீசி 13 முக்கியப் பகுதிகள், 60 ராணுவ நிலைகளை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் Donetsk பகுதிகளை முழுமையாக கைப்பற்றி கிரிமியாவிற்கு இடையிலான நில பரப்பு இணைப்பை ஏற்படுத்த ரஷ்யா முயல்வதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆயுதங்களைக் கீழே போடும் உக்ரைன் வீரர்களுக்கு மனிதாபிமான பாதைகளை மரியுபோல் வழியாக திறந்து உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Comments