தமிழ்நாட்டில் மாஸ்க் அணிவது அவசியமானதாகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3146
தமிழ்நாட்டில் மாஸ்க் அணிவது அவசியமானதாகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் புதிதாக கட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை திறந்து வைத்த பின்னர் பேசிய அவர், டெல்லி, உத்தரபிரதேசம், கேரளா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற நடவடிக்கை தான் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் விளக்கமளித்த அவர், கடந்த ஒரு மாதமாக கொரோனா இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் உள்ளது என தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments