கேரளாவில் தாலிக் கட்டும் நேரத்தில் மேடையில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண்.. மணக்கோலத்தில் பரிதவித்து நின்ற மணமகன்.!
கேரளாவில், தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தில் விருப்பமில்லை எனக்கூறி மணப்பெண் மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்ததால், பெண் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
மண்துருத்தி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் , கல்லுநாகம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினதாரால் நிச்சயிக்கப்பட்டு இரட்டகுளங்கரை பகுதியிலுள்ள கோவில் மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்தது. மேடைக்கு வந்த மணப்பெண், மணமகன் மாலை போட சென்ற போது, மணமேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.
இதனால் மணமக்களின் இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருமணம் பாதியில் நின்றது. தகவலறிந்து வந்த போலீசார் மணப்பெண்ணிடம் விசாரித்ததில், தான் மற்றொரு நபரை காதலிப்பதாகவும், வீட்டாரின் நிர்பந்தத்தால் திருமணம் நடக்க இருந்தததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் பெண் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதை அடுத்து போலீசார் அறிவுரை கூறி இருவீட்டாரையும் அனுப்பி வைத்தனர்.
Comments