சட்டவிரோத கனிமக் கடத்தலை தடுக்க வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை - துரைமுருகன்
சட்டவிரோத கனிமக் கடத்தலை தடுக்க, கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறையின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்துவதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தடுக்க புதிய திட்டம் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்கலன்கள், கிராபைட் கம்பிகள் போன்ற பொருட்களின் உற்பதிக்கு பயன்படும் கிராபைட் செதில்களின் உற்பத்தி 120 கோடி ரூபாய் செலவில் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments