சிவகாசியில் 30 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விபத்து.. புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சுமார் 30 ஆண்டுகள் பழமையான தொகுப்பு வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, வீடு திடீரென இடிந்து விழுந்த விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார்.
கொத்தனேரி பகுதியில் உள்ள கருப்பையா என்பவருக்கு சொந்தமான தொகுப்பு வீட்டை புதுப்பிக்கும் பணியில் தாலிகொளுந்துபட்டி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் உட்பட 4 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அஜித்குமார் வீட்டிற்குள் பணிகளை மேற்கொண்டு வந்த போது வீடு திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இடுபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த அஜித்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்ற தொழிலாளிகள் கட்டிடத்திற்கு வெளியே இருந்ததால், அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments