காதலுக்காக திருநம்பியாக மாறிய பெண்ணை கைவிட்ட காதல் தோழி..! ஆதரவின்றி தெருவில் சுற்றும் கொடுமை

0 6794
காதலுக்காக திருநம்பியாக மாறிய பெண்ணை கைவிட்ட காதல் தோழி..! ஆதரவின்றி தெருவில் சுற்றும் கொடுமை

ஊர்க்காவல் படையில் பணியாற்றும் தோழி ஒருவருடன் காதல் வயப்பட்ட , பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் திரு நம்பியாக மாறி தோழியை திருமணம் செய்த நிலையில், தோழி பிரிந்து சென்றுவிட்டதால் திருநம்பியாக மாறியவர் ஆதரவின்றி தெருவில் சுற்றி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகள் ஜெயசுதா, இவருக்கு ஊர்காவல் படையில் பணியாற்றும் செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி , பெண்கள் இருவரும் மதுரையின் பல்வேறு இடங்களில் ஜோடியாக ஊர் சுற்றி உள்ளனர். இருவரது வீட்டிலும் தனி தனியாக திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்ததால், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இந்த சமுதாயம் கேலி பேசும், எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய செந்திலா, நீ ஆணாக மாறிவிட்டால் வீட்டில் யாருக்கும் தெரியாது என கூறியதோடு ஆணாக மாற கட்டாயபடுத்தியதாக கூறப்படுகின்றது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநம்பியாக மாற்றி கொள்ள அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வசதி உள்ளது என அழைத்து சென்று டிசம்பர் 2021ல் பெண்ணின் அடையாளமான மார்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதாக கூறப்படுகிறது. அதோடு ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியதன் பேரில் ஹார்மோன் ஊசியும் போட்டு வந்துள்ளார் திருநம்பி ஜெயசுதா.

அறுவை சிகிச்சைக்குப் பின்பு தனது பெயரை ஆதிசிவன் என மாற்றிய ஜெயசுதா, தைப்பொங்கல் அன்று திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் வைத்து காதல் தோழி செந்திலாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

செந்திலாவை பெற்றோர்கள் இரண்டு மூன்று நாட்கள் தேடிய நிலையில் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் ஆதிசிவனுடன் திருமணமாகி திருப்பரங்குன்றத்தில் வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வருவதாக செந்திலா தனது தாயிக்கு போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து செந்திலாவை வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளையின் விவரம் குறித்து பேசிய போது, செந்திலா தனது தாயிடம் , தோழியாக இருந்த ஜெயசுதாவை தான் ஆணாக மாற்றி திருமணம் செய்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார்

இதனால் பதறி போன பெற்றோர்கள் செந்திலாவின் உடைமைகளையும், பொருட்களையும் எடுத்து கொண்டு, தங்கள் மகளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலா பெற்றோர்கள் , தங்கள் மகளை ஏமாற்றி, இயற்கைக்கு மாறாக திருமணம் செய்து கொண்டு ஜெயசுதா வாழ்வதாக புகார் ஒன்றையும் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் செந்திலா, திரு நம்பி ஆதிசிவனுடன் ஒன்றாக வாழ பிடிக்கவில்லை என்றும் தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதால் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கி க் கொண்ட போலீசார் செந்திலாவை பெற்றோருடன்அனுப்பி வைத்தனர்.

காதல் தோழிக்காக தற்போது உடல் உறுப்பையும் இழந்து பணத்தையும் இழந்த திரு நம்பி ஆதிசிவனை, தாய் - தந்தையும் வீட்டில் சேர்த்து கொள்ளாததால் ஆதரவின்றி மொட்டையடித்துக் கொண்டு அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்

காதல் வந்தால் பசி.. தூக்கம்... காலை... மாலை .. பார்க்கின்ற வேலை... வரை எதை மறந்தும் வாழலாம், இயற்கைக்கு மாறான காதலுடன் இரண்டு மாதங்கள் கூட உருப்படியாக வாழ இயலாது என்பதற்கு இந்த காதல் ஜோடியே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments