ரஷ்யாவில் பண வீக்கம் சீராகி வருகிறது - அதிபர் புதின்
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து மேற்கு நாடுகள் தங்களுக்கு தானே பொருளாதார சீரழிவுகளை சந்தித்துக் கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் பொருளாதார நிலை குறித்துப் பேசிய புதின், பண வீக்கம் சீராகி வருவதாக கூறினார். மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள் கடனளிப்பதை எளிதாக மாற்றினாலும், பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பட்ஜெட்டைப் பயன்படுத்த வேண்டும் என புதின் தெரிவித்தார்.
புதிய நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு வர்த்தகங்களில் தேசிய நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையை ரஷ்யா விரைவுபடுத்த வேண்டும் என்று புதின் குறிப்பிட்டார்.
Comments