உ.பி.யில் எஸ்யுவி ரக காரும், பேருந்தும் மோதி விபத்து... 6 பேர் பலி

0 2890

உத்திரப்பிரதேச மாநிலம் தியோரியாவில் எஸ்.யு.வி ரக காரும், பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

நேற்றிரவு திருமண சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு கௌரி பஜார் - ருத்ரபூர் சாலை வழியாக எஸ்யுவி ரக காரில் சிலர் பயணித்துள்ளனர். காளிகோவில் அமைந்துள்ள பகுதியில் சாலைவளைவில் சென்ற போது எதிரே வந்த பேருந்து அந்த காரின் மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments