ஓடும் ரயிலில் பயணிகளிடம் குடிபோதையில் தொல்லை - சிஆர்பி எப் வீரர் கைது

0 3716
ஓடும் ரயிலில் பயணிகளிடம் குடிபோதையில் தொல்லை - சிஆர்பி எப் வீரர் கைது

ரயில் பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதை வைத்து ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளை ஆபாசமாகப் பேசி தொல்லை கொடுத்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது செய்யப்பட்டார்.

குருவாயூர் விரைவு ரயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்த வசந்த் என்ற பயணி தாங்கள் பயணம் செய்யும் பெட்டியில் குடிபோதையில் ஒரு நபர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தங்கள் மீது எச்சில் உமிழ்ந்து மிகுந்த தொல்லை கொடுப்பதாக  புகைப்பட ஆதாரத்துடன் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக காவல்துறையை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இதனை அறிந்த தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் சென்னை வந்த குருவாயூர் விரைவு ரயிலில் S10 பெட்டியை சோதனையிட்ட எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் அங்கு சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்து தகாத முறையில் நடந்துகொண்ட நபரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments