நிதிப்பற்றாக்குறை: பாகிஸ்தானில் மின் உற்பத்தி பாதிப்பு

0 3470

மின் உற்பத்திக்கு நிலக்கரி, இயற்கை எரிவாயு வாங்க போதிய நிதி இல்லாததால் பாகிஸ்தான் அரசு, வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன், ரஷ்யா போர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி விநியோக குறைபாடுகளால் கடந்த 9 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானின் எரிசக்தி கொள்முதல் செலவு 15 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி, இயற்கை எரிவாயு என மின் உற்பத்திக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவு போதிய நிதியின்மையால் 3 ஆயிரத்து 500 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆப்லைன் உற்பத்தி முறையிலும் இதே குளறுபடிகள் நீடிப்பதாக புதிய அமைச்சரவையின் நிதி அமைச்சர் மிப்தா இஸ்மயில் தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments