உக்ரைன் - ரஷ்யா போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் - ஐ.நா. பொதுச் செயலாளர்
உக்ரைன் - ரஷ்யா போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், போரால் மனித இனத்தில் 5ல் ஒரு பங்கிற்கு மேல் மக்கள் வறுமை, பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போரால், அந்நாட்டு எல்லைகளை கடந்து, வளர்ந்து வரும் நாடுகள் மீதும் மவுன தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளதாகவும், பல தசாப்தங்களாக காணாத நிலையை எட்டக்கூடும் என்றும் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கோதுமை, சோளம் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கச்சா எண்ணெய் விலை 60 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதுடன், எரிவாயு மற்றும் உரம் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments