மின்சார பற்றாக்குறையை சமாளிக்க 4லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரித்துள்ளது என்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க 4லட்சத்து 80ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மொத்த மின் தேவை 14ஆயிரம் மெகா வாட் என்ற அளவாக இருந்ததாகவும், தற்போது உச்சபட்சமாக 17,196 மெகா வாட் என்ற அளவில் மின் தேவை அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
கோடைக்காலத்தில் 2500 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை சமாளிக்க, நடுத்தர கால கொள்முதல் மூலம் ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா மூவாயிரம் மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
Comments