இந்தியாவில் இருந்து வாகன ஏற்றுமதி 43 விழுக்காடு உயர்வு.!
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021 - 2022 நிதியாண்டில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது முந்தைய ஆண்டைவிட 43 விழுக்காடு அதிகமாகும். 2 இலட்சத்து 35 ஆயிரத்து 670 வாகனங்களை ஏற்றுமதி செய்து மாருதி சுசுகி முதலிடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டைவிட அந்த நிறுவனம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
ஏற்றுமதியான வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதியின் பலினோ, டிசயர், சுவிப்ட், எஸ்பிரசோ, பிரெசா ஆகிய மாடல்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹுண்டாய், கியா நிறுவனங்கள் உள்ளன.
Comments