உத்திரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமானது
உத்திரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சில நகரங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாக கூறி மாநிலம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் மாஸ்க் அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது சில நகரங்களில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் காசியாபாத், ஹபூர், மீரட், புலந்த்ஷாகர் பாக்பட், லக்னோ உள்ளிட்ட நகரங்களிலும், கவுதம புத்தா நகர் மாவட்டத்திலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
Comments