டிவி தொகுப்பாளினி மணிமேகலையின் விலையுயர்ந்த பைக் திருட்டு

0 8395

பிரபல சின்னத்திரை நடிகை மணிமேகலையின் விலையுர்ந்த இருசக்கர வாகனம் திருடுபோனதாக அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகையும், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியுமாக இருப்பவர் மணிமேகலை, இவரது கணவர் நடன கலைஞரான ஹூசைன். இவர்கள் தங்களது கேடிஎம் ரக விலையுயர்ந்த இரு சக்கர வாகனத்தை அசோக் நகரில் உள்ள அவர்களது நண்பர் அரவிந்த் வீட்டில் நிறுத்திவைத்திருந்ததாகவும், இன்று அதிகாலை அந்த வாகனம் திருடப்பட்டிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments