உக்ரைனுக்கு சொந்தமான 470 டிரோன்கள்,998 பீரங்கி துப்பாக்கிகள் தாக்கி அழிப்பு -ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம்

0 2846

உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நாள் முதல் அந்நாட்டுக்கு சொந்தமான 470 டிரோன்களை தாக்கி அழித்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

136 விமானங்கள், 249 விமான ஏவுகணை தடுப்பு அமைப்புகள், 2 ஆயிரத்து 308 டாங்குகள் மற்றும் கவச போர் வாகனங்கள், 254 பல ஏவுகணை தாக்குதல் அமைப்புகள், 998 பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் சிறிய பீரங்கிகள், 2 ஆயிரத்து 171 சிறப்பு ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் தாக்கி அழித்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோவ்(igor konashenkov) தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் 4 ராணுவ கட்டளை மையங்கள், 4 பீரங்கி பேட்டரிகள், 2 எரிபொருள் கிடங்குகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உக்ரைனிய இலக்குகளை ரஷ்ய படைகள் அழித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments