தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3135

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனின் மறைவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனனர்.

விஷ்வாவின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 83வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க விஷ்வா அசாமின் கவுஹாத்தியில் இருந்து 3 வீரர்களுடன் காரில் மேகாலயாவின் ஷில்லாங் புறப்பட்டு சென்றார்.

வழியில் ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்ற போது கார் எதிரே அதிவேகமாக வந்த லாரி மீது மோதியதில் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சாதனைகள் புரிந்து வந்த விஷ்வா விரைவில் நம்மை விட்டு பிரிந்தது வேதனையளிப்பதாக முதலமைச்சர் இரங்கல் குறிப்பில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, விஷ்வாவின் குடும்பத்தாருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments