இசைஞானி இளையராஜாவை அவமானப்படுத்துவதா.? - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம்
இசைஞானி இளையராஜா மீதான கடும் விமர்சனங்களைக் கண்டித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாற்றுக் கருத்துக் கொண்டோரைச் சொற்களால் இழிவுபடுத்துவதுதான் ஜனநாயகமா? என வினவியுள்ளார்.
ஒரு நூலுக்கு இளையராஜா எழுதிய அணிந்துரையில் அம்பேத்கரின் எண்ணங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்துப் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் அவருக்கு எதிரான கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் உயரிய இசையாளுமைகளில் ஒருவரான இளையராஜா மீது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியுடன் சேர்ந்த அமைப்பினர் வசைமொழிந்து, அவரை அவமதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சிக்கும் அதன் கூட்டணியினருக்கும் இணக்கமான கருத்தை அவர் கொண்டிருக்கவில்லை என்பதற்காக அவர்மீது வசைபாடுவதா ஜனநாயகம்? என்றும் வினவியுள்ளார். மாற்றுக் கருத்துக் கொண்டோரும் மகிழ்ச்சியாக வாழ ஜனநாயகத்தில் இடமுண்டு என்னும்போது, அவரை அவமானப்படுத்துவது ஏன்? என்றும் வினவியுள்ளார்.
Comments