டென்மார்க்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் தங்கப்பதக்கம் வென்று சாதனை
டென்மார்க் நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
Copenhagen பகுதியில் டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் 800 மீட்டர் பிரீ நீச்சல் பிரிவில் பங்கேற்ற வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகர் மாதவன், இந்த சாதனை மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமின்றி நாடே பெருமை கொள்வதாகவும், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Comments