உக்ரைனில் இருந்து 48 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்… ஐநாவுக்கான அகதிகள் அமைப்பு தகவல்
உக்ரைனில் இருந்து இதுவரை 48 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி இருப்பதாக ஐநாவுக்கான அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ந்தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்த முதல் தற்போது வரை 48 லட்சத்து 69ஆயிரம் பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் அண்டை நாடான போலந்தில் தான் குடியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உக்ரைன் நாட்டு மக்கள் தொகை 44.13 மில்லியனாக இருந்த தாகவும், அதில் தற்போது 10சதவீதம் பேர் அகதிகளாக வெளியேறி விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments