200 கி.மீ. தூரம் மாரத்தான் ஓட்டத்தில் சென்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த சிறுமி
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தில் சென்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.
பிரக்யராஜை சேர்ந்த காஜல் என்ற சிறுமி, பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டதுடன், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தடகள வீராங்கனையாக வேண்டும் என்ற கனவை கொண்ட அவர், சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரத்தை 5 நாட்களில் கடந்து மாநில தலைநகர் லக்னோவை சென்றடைந்தார். அங்கு தன்னை சந்தித்த சிறுமிக்கு, ஷூ, விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை யோகி ஆதித்யநாத் பரிசளித்தார்.
Comments