இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 109 சதவீதம் உயர்வு..!
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 109 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்த அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள், விவசாயிகள் உலக சந்தையை அணுகவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுவதாக கூறினார்.
மேலும், 2013-14ஆம் நிதியாண்டில் பாஸ்மதியைத் தவிர்த்து அரிசி ஏற்றுமதி 2 ஆயிரத்து 925 மில்லியன் டாலர் அளவிற்கு இருந்ததாகவும், 2021-22ஆம் நிதியாண்டில் அவை 109 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments